தேனியில் 5 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவு

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வட்டாரக் கல்வி 

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 5 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
சின்னமனூர் வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி பெரியகுளத்திற்கும், பெரியகுளம் வட்டாரக் கல்வி அலுவலர் சதீஷ்குமார் போடிக்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். உத்தமபாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் சுபாஷினி சின்னமனூருக்கும், ஆண்டிபட்டி வட்டாரக் கல்வி அலுவலர் நாகஜோதி உத்தமபாளையத்திற்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். போடி வட்டார கல்வி அலுவலர் பாமாராணி ஆண்டிபட்டிக்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com