ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்எல்ஏக்கள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவை

ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவை நேரில் சந்தித்து தொகுதி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர் ஆ.மகாராஜன்(திமுக), பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.எஸ்.சரவணக்குமார்(திமுக) ஆகியோர் ஆட்சியரை நேரில் சந்தித்தனர். அப்போது திமுக மாவட்டப் பொறுப்பாளர் நா.ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஆ.மகாராஜன் கூறுகையில், ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு மலைப் பகுதியில் பாரம்பரிய வனவாசிகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். மூல வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். வைகை அணையை தூர்வார வேண்டும். 
வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி வட்டாரத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். முல்லைப் பெரியாற்றில் இருந்து கால்வாய் மூலம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
கே.எஸ்.சரவணக்குமார் கூறியது: பெரியகுளம் தொகுதியில் மா மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்பு கூடங்கள் அமைக்க வேண்டும். சோத்துப்பாறை அணையை தூர்வார வேண்டும். வெளவால் அணைக்கட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.  சோத்துப்பாறை அணையில் இருந்து ஜல்லிபட்டி, சருத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com