ஆண்டிபட்டி அருகே சேதமடைந்த  சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ள கிராமச் சாலையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ள கிராமச் சாலையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு அருகே கோவில்பாறை, வாய்க்கால்பாறை, பச்சையப்பாபுரம், உப்புத்துறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் விளையும் விளைப் பொருள்களை ஆண்டிபட்டி, தேனியில் உள்ள சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமங்களுக்கான தார்ச்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதில் தற்போது கோவில்பாறை முதல் தங்கம்மாள்புரம் வரை 6 கி.மீ. தார்ச்சாலை தற்போது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. 
இதில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வரும்  வாகனங்கள்  அடிக்கடி பழுதாகி விடுவதாகவும்,  குறித்த நேரத்தில் மாணவர்கள்  பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை . 
எனவே இச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com