போடி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசனைக் கூட்டம்

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் கற்றல் விளைவுகள் குறித்த பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் கற்றல் விளைவுகள் குறித்த பெற்றோர் ஆசிரியர் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி மற்றும் குழந்தைகளுக்கான கட்டாய கல்விச் சட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மத்திய மாநில அரசுகள் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழக தொடக்கக் கல்வித் துறை, அனைத்து குழந்தைகளும் குறைந்தபட்சக் கற்றல் அடைவுகளையேனும் அடைதல் வேண்டும் என்ற நோக்கில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த கற்றல் விளைவுகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
 இதன்படி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் போடி வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் ஆர்.கவிதா தலைமையிலும், பள்ளி தலைமையாசிரியர் ஆர்.ஜெயக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. 
கூட்டத்தில் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர் உமாகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கற்றல் விளைவுகள் குறித்த கையேடு ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் கல்வி கற்றலில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும்,  பாடங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர்கள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com