சாலை விபத்தில் இளைஞர் சாவு
By DIN | Published On : 04th March 2019 07:43 AM | Last Updated : 04th March 2019 07:43 AM | அ+அ அ- |

கடலாடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
கடலாடி வட்டம் காவாகுளத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டி மகன் ஜெகதீஸ்வரன் (20).இவர், மேலக்கிடாரத்திலிருந்து தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வேகமாகச் சென்றாராம். சாலை வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜெகதீஸ்வரன் கீழே விழுந்துள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை சௌந்தரபாண்டியன் அளித்த புகாரின்பேரில், கீழச்செல்வனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.