ஆசாரிபட்டியில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டி கிராமத்தில் தமிழ் விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டி கிராமத்தில் தமிழ் விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு விவசாயி பால்ராஜ் தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்க தேனி மாவட்ட துணைத் தலைவர் வி.என்.ராமராஜ், செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் தமிழ் விவசாயிகள் சங்க தேனி மாவட்ட தலைவர் சின்னச்சாமி பேசியது: ஆண்டிபட்டி ஒன்றியத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயத்தை நம்பியிருந்த பலர் மாற்றுத் தொழிலைத் தேடி திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வைகை அணை அருகில் இருந்தும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஒரு பகுதி நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்ட தெப்பம்பட்டி திப்பரேவு அணைத் திட்டம் தொடங்காமலேயே கைவிடப்பட்டது. பல கிராமங்களில் குடிநீருக்கு அல்லல்படும் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்வது ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வாடிக்கையாகிவிட்டது. எனவே முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து ஆண்டிபட்டி ஒன்றியங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பி ஆண்டிபட்டி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். வைகை அணையிலிருந்து ஆற்று வழியாக தொடர்ந்து தண்ணீர் வழங்கி ஆற்றோர பாசன விவசாயிகளை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
மேலும் இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து நாடகங்கள் நடத்தப்பட்டன. முடிவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஏ.பி.அய்யாத்துரை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com