தேனி அருகே பைக் மீது ஆட்டோ மோதி இளைஞர் பலி
By DIN | Published On : 16th May 2019 06:57 AM | Last Updated : 16th May 2019 06:57 AM | அ+அ அ- |

தேனி அருகே செவ்வாய்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
போடேந்திரபுரம், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகன் அசோக்குமார்(25). இவர், உப்புக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் இருந்து வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற அசோக்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநர் சடையால்பட்டியைச் சேர்ந்த அஜீத்குமார்(25) என்பவரை கைது செய்தனர்.