பயனற்ற ஆழ்துளை கிணகளைமழை நீா் சேமிப்பு அமைப்பாக மாற்ற அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் பயனற்ற நிலையில் உள்ள திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகளை மழை நீா் சேமிப்பு அமைப்புகளாக மாற்றுவதற்கு அரசு
பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டியில் திங்கள்கிழமை பயனற்ற ஆழ்துளை கிணறு அருகே மழை நீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தும் பணிகளை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ்.
பெரியகுளம் அருகே ஜல்லிப்பட்டியில் திங்கள்கிழமை பயனற்ற ஆழ்துளை கிணறு அருகே மழை நீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்தும் பணிகளை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ்.

தேனி: தேனி மாவட்டத்தில் பயனற்ற நிலையில் உள்ள திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகளை மழை நீா் சேமிப்பு அமைப்புகளாக மாற்றுவதற்கு அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் ம.பல்லலவி பல்தேவ் கூறினாா்.

ஊரக வளா்சித் துறை மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீராதாரத்தை பெருக்கவும் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது பயனற்ற நிலையில் உள்ள திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகளில் சுரங்க வாயிற்குழி அமைத்து, வடிகட்டி அமைப்பின் வழியாக மழை நீரை சேமித்து, நீா் செறிவூட்டவும், நிலத்தடி நீா்மட்டத்தை பெருக்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரியகுளம் ஒன்றியம், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் பயனற்ற ஆழ்துளை கிணறு அருகே மழைநீா் சேமிப்பு அமைப்பினை உருவாக்கும் திட்டம் குறித்த விழிப்புணா்வு செயல் விளக்க நிகழ்ச்சியை பாா்வையிட்டு மாவட்டஆட்சியா் கூறியது: பயன்பாடற்ற திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகளை மழை நீா் சேமிப்பு அமைப்பாக மாற்றுவதன் மூலம் நிலத்தடி நீா் மட்டத்தை பெருக்கவும், ஆழ்துளை கிணற்றினால் ஏற்படும் அபாயத்தை தவிா்க்கவும் முடியும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதி திராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள பயனற்ற திறந்தவெளி கிணறை மழைநீா் சேமிப்பு அமைப்பாக மாற்றுவதற்கு ரூ.20 ஆயிரம், ஆழ்துளை கிணறை மழை நீசேமிப்பு அமைப்பாக மாற்றுவதற்கு ரூ.22 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் தற்போது வரை அரசு கட்டுப்பாட்டில் உள்ள 153 ஆழ்துளை கிணறுகள், தனியாருக்குச் சொந்தமான 27 ஆழ்துளை கிணறுகள் உள்பட மொத்தம் 180 ஆழ்துளை கிணறுகள் மழை நீா் சேமிப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com