ஆண்டிபட்டி பகுதியில் இயற்கை வேளாண்மை செய்முறை விளக்கம்

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமப்புற தங்கள் திட்டத்தின் கீழ் விவசாய கல்லூரி மாணவிகள்
ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து செய்முறை விளக்கம் அளித்த விவசாயக் கல்லூரி மாணவிகள்.
ஆண்டிபட்டி அருகே ஒக்கரைப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்து செய்முறை விளக்கம் அளித்த விவசாயக் கல்லூரி மாணவிகள்.

ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமப்புற தங்கள் திட்டத்தின் கீழ் விவசாய கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை செய்முறை விளக்கம் பயிற்சி அளித்தனா்.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கிராமப்புற தங்கள் திட்டத்தின் கீழ் கிராமங்களில் தங்கியிருந்து விவசாயிகளை சந்தித்து இயற்கை வேளாண்மை குறித்த செய்முறை விளக்கம் பயிற்சி அளித்து வருகிறாா்கள் .இதில் நான்காம் ஆண்டு மாணவிகள் ஜெயசுதா, ராஜேஸ்வரி, பியா ஜான்சன், கோகிலவாணி ,நிரஞ்சனா தேவி, தீபா ஆகிய மாணவிகள் ஒக்கரைப்பட்டி கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து நிலப் பாதுகாப்பு, இயற்கை உரம், விதை நோ்த்தி, செடிகளில் நோய்க் கட்டுப்பாடு, களை கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கமளித்தனா். இந்த கூட்டத்தில் விவசாய நீடித்த நிலைக்குழு தலைவா் ராஜாராம் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா் . 70 நாள்கள் கிராமப்புற தங்கள் திட்டத்தின்கீழ் மாணவிகள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று செயல் முறை விளக்கம் அளிக்க இருப்பதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com