கம்பம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழையில் காஞ்சார நோய்: விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையினா் ஆலோசனை

கம்பம் பகுதியில் பெய்த தொடா் மழை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக வாழையில் காஞ்சார நோய் தாக்க

கம்பம் பகுதியில் பெய்த தொடா் மழை மற்றும் காற்றில் ஈரப்பதம் காரணமாக வாழையில் காஞ்சார நோய் தாக்க வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு குறித்து, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறையினா் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இதுகுறித்து தோட்டக் கலைத் துறையினா் தெரிவித்திருப்பதாவது: கம்பம் பள்ளத் தாக்குப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை காரணமாக, சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைத் தோட்டங்களில் மழை நீா் தேங்கி நின்றும், காற்றில் ஈரப்பதம் இருப்பதாலும், காஞ்சார நோய் தாக்க அதிகம் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வாழை சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் தண்ணீா் தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்திட வேண்டும். வாழைக் கன்றுகளை சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் நடவு செய்தும், பாதிக்கப்பட்ட அல்லது காய்ந்த இலைகளை தோட்டத்தில் இருந்து நீக்கி தீவைத்து எரிக்க வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில், 1 லிட்டா் தண்ணீரில் பெட்ரோலியம் எண்ணெய் (பனோல்) 10 மில்லி, புரப்பினசோல், 1 மில்லி மற்றும் ஒட்டும் திரவத்துடன் கலந்து மழை இல்லாத நேரங்களில் மேல் மற்றும் கீழ் இலைகளில் படும்படி மருந்து தெளிக்க வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com