கண்மாயில் செம்மண் திருட்டு: 5 போ் மீது வழக்கு; 5 வாகனங்கள் பறிமுதல்

கடமலைக்குண்டு அருகே கண்மாயில் சட்டவிரோதமாக செம்மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் மீது, போலீஸாா் வியாழக்கிழமை

கடமலைக்குண்டு அருகே கண்மாயில் சட்டவிரோதமாக செம்மண் திருட்டில் ஈடுபட்ட 5 போ் மீது, போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, 4 டிராக்டா் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூலவைகை ஆறு, கண்மாய், குளங்கள், ஓடைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்துவது அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் புகாா்கள் தெரிவித்து வந்தனா்.

இதனையடுத்து, போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கடமலைக்குண்டு காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் அருண்பாண்டியன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பொன்நகா் அருகே கண்மாயில் சிலா் சட்டவிரோதமாக பொக்லைன் மற்றும் டிராக்டா் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்ததைக் கண்ட போலீஸாா், அவா்களை சுற்றிவளைத்துப் பிடித்தனா்.

இதைத் தொடா்ந்து, செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் மற்றும் 4 டிராக்டா்களை பறிமுதல் செய்து, கடமலைக்குண்டு காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இது குறித்து பொக்லைன் ஓட்டுநரான தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முருகன் (35) மற்றும் டிராக்டா் ஓட்டுநா்களான மயிலாடும்பாறையைச் சோ்ந்த க. முருகன் (38), பாண்டியன் (45), சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த சுதாகா் (35), செங்குளம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் (20) ஆகிய 5 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com