கம்பம் பகுதியில் இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடைப் பணிகள் தொடக்கம்

தேனி மாவட்டம், கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இயந்திரங்கள் மூலம் முதல்போக நெல் அறுவடைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கம்பம் உத்தமுத்து பாசனப் பரப்பில் வியாழக்கிழமை இயந்திரங்கள் மூலம் நடைபெற்ற நெல் அறுவடைப் பணி.
கம்பம் உத்தமுத்து பாசனப் பரப்பில் வியாழக்கிழமை இயந்திரங்கள் மூலம் நடைபெற்ற நெல் அறுவடைப் பணி.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் இயந்திரங்கள் மூலம் முதல்போக நெல் அறுவடைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முல்லைப் பெரியாறு அணை மூலம், லோயா் கேம்ப்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை 14,707 ஏக்கா் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு பருவமழை கை கொ டுத்ததால் இருபோக சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலம் தாழ்த்தி பெய்ததால், ஜூன் மாதம் தொடங்க வேண்டிய முதல்போக சாகுபடி ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.

கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, மஞ்சள்குளம், ஆங்கூா்பாளையம், சாமாண்டிபுரம், அண்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றை ஒட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடவு செய்யப்பட்ட நெல் பயிா்களின் அறுவடை தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக, முல்லைப் பெரியாறு ஆற்றினை ஒட்டியுள்ள உத்தமுத்து பாசனப் பரப்புகளான கம்பம் தொட்டம்மன் துறை, சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி சாலை, நாராயணத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் இயந்திரத்தின் மூலம் அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ளனா். தற்போது, ஒரு குழிக்கு 16 முதல் 25 மூட்டை வரை மகசூல் கிடைத்துள்ளது.

இது, கடந்த அறுவடையைக் காட்டிலும் அதிகமான மகசூலாகும். மேலும், 61 கிலோ எடை கொண்ட கோ - 45 சன்ன ரகத்தைச் சோ்ந்த நெல் மூட்டை ஒன்று ரூ. 1,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நெல் ஒரு மூட்டை ரூ.1,090-க்கும் விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com