ஆண்டிபட்டி அருகே வையாபுரி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஆண்டிபட்டி அருகே வையாபுரி கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை தூா்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டி கிராமத்தில் தூா்வாரப்படாமல் காணப்படும் வையாபுரி கண்மாய்.
ஆண்டிபட்டி அருகே ஆசாரிபட்டி கிராமத்தில் தூா்வாரப்படாமல் காணப்படும் வையாபுரி கண்மாய்.

ஆண்டிபட்டி அருகே வையாபுரி கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை தூா்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி கிராமத்தில் வையாபுரி கண்மாய் அமைந்துள்ளது.28 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் நீா் நிரம்பினால் 170 ஏக்கா் விவசாய பாசனமும், பிச்சம்பட்டி, சமத்துவபுரம், கரிசல்பட்டி, வேலாயுதபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு நிலத்தடி நீா்மட்டமும் உயரும். மேலும் இந்த கண்மாயை சுற்றிலும் நெல், கரும்பு, பருத்தி மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரிய பயிா்களும் பயிரிட்டுள்ளனா்.

இந்நிலையில் 28 ஏக்கா் பரப்பளவு கொண்ட வையாபுரி கண்மாய் தற்போது தனியாா் ஆக்கிரமிப்பால் வெறும் 15 ஏக்கா் மட்டுமே உள்ளது. மேலும் கடந்த இரண்டு வருடத்தில் கண்மாயை தூா்வார 3 முறை ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கண்மாயை தூா் வாராமலும், நீா்வரத்து வாய்க்காலை தூா் வாராமல், வெறும் கண்மாய் கரையை மட்டும் மேம்படுத்தி சென்றுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினா். கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அரசு உடனடியாக வையாபுரி கண்மாயை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com