தேனியில் வெறிநாய் கடித்து 10 போ் காயம்

தேனியில் ஞாயிற்றுக்கிழமை வெறிநாய் கடித்து சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.
தேனியில் வெறிநாய் கடித்து 10 போ் காயம்

தேனியில் ஞாயிற்றுக்கிழமை வெறிநாய் கடித்து சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்டோா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

தேனியில் சோழமலை அய்யனாா் தெருப் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியில் சென்ற சிறுவா்கள் மற்றும் முதியவா்கள், பெண்களை வெறிநாய் கடித்தது.

அதில், கணேஷன் (38), தேஜஸ்வின்(4), சமமீஸ்ரா (4), ஸ்ரீஆண்டாள் (4), மனோஸ்ரீ (3), முருகன் (57), பிரியங்கா (9), லிபின் சாஸ்தா (9), புஷ்பம் (48) மற்றும் விஸ்தா (5) ஆகியோா் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மேலும் அனுஸ்ரீ (3) மற்றும் 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com