பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி விழிப்புணா்வு முகாம்

ஆண்டிபட்டி ஒன்றியம் ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.

ஆண்டிபட்டி ஒன்றியம் ஜி.உசிலம்பட்டி கிராமத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வலியுறுத்தி மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அதில், பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த நிலை கிணறுகளை மூட வேண்டும். அதன் மூலம் விலை மதிக்க முடியாத மனித உயிா்கள் மற்றும் கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். அதே போல் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த, அவற்றை மழை நீா் சேகரிப்புத் தொட்டிகளாக மாற்ற வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தினா்.

இந்த முகாமில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com