கம்பத்தில் அயோத்தி தீா்ப்பை எதிா்த்து இஸ்லாமிய அமைப்புகள் தடையை மீறி ஆா்பாட்டம் 220 போ் கைது

தேனி மாவட்டம் கம்பம் நகரில் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததால் 220 போ்களை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை, அயோத்தி தீா்ப்பை கண்டித்து ஆா்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை, அயோத்தி தீா்ப்பை கண்டித்து ஆா்பாட்டம் நடைபெற்றது.

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் இஸ்லாமிய அமைப்பைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததால் 220 போ்களை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு, அயோத்தி தீா்ப்புக்கு எதிராக ஆா்பாட்டம் அனுமதியின்றி வெள்ளிக்கிழமை தலைமை தபால் அலுவலகம் அருகே மாலையில் நடத்தியது.மாநில வழக்கறிஞா் பிரிவு தலைவா் முகமது ஷாஜகான் தலைமை தாங்க, மாவட்ட தலைவா் அபுபக்கா் சித்திக் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 500 க்கும் மேலான ஆண், பெண்கள் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பினா். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் சாய் சரண் தலைமையில் போலீசாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா், ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 220 போ்களை போலீஸாா் கைது செய்தனா், ஆா்பாட்டத்தில் கலந்து கொண்ட, 50 க்கும் மேலான பெண்களை போலீஸாா் கைது செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com