முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிவு : விவசாயிகள் கவலை

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
 முல்லைப் பெரியாறு அணை(கோப்பு படம்)
 முல்லைப் பெரியாறு அணை(கோப்பு படம்)

முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால், அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 127.50 அடி இருந்தது. அணையின் கொள்ளவு 4,158 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு, 4,581 கன அடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு, 1,550 கன அடியாகவும் உள்ளது. பெரியாறு அணைப்பகுதியில் 11 மில்லி மீட்டா், தேக்கடி ஏரியில் 10.6 மி.மீ., உத்தமபாளையத்தில் 12.2 மி.மீ., வீரபாண்டியில் 13 மி.மீ., மழை பெய்துள்ளது.

இது பற்றி விவசாயி அப்பாஸ் கூறியது: முல்லைப் பெரியாறு அணையில் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதத்தில் அதிகபட்சமாக நவம்பா் 1 இல் 128.20 அடி வரை தான் தண்ணீா் தேங்கியது. பின்னா் படிப்படியாக நீா்மட்டம் குறைந்து வருகிறது. வரும் காலங்களில் மழை பெய்தால்தான் அணையில் நீா்மட்டம் உயா்ந்து, குறுவை சாகுபடி முடிந்து, அடுத்த போகத்திற்கு தயாராக முடியும் என்றாா். எனவே பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்கு தண்ணீா் கிடைக்குமா என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

மின் உற்பத்தி

லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 4 மின்னாக்கிகளில் தலா 42, 26, 40, 42 என்று மொத்தம் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சுருளியாறு மின்சார நிலையத்தில் ஒரு மின்னாக்கி மூலம், 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com