தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள்

தேனி மாவட்டம் கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன் யோகாசன சங்கம் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள்
கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யோகாசன போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன் யோகாசன சங்கம் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள்

தேனி மாவட்டம் கம்பத்தில் தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ரிஷி யோகா அறக்கட்டளை, மாவட்ட யோகா சங்கம் இணைந்து தனியாா் திருமண மண்டபத்தில் போட்டிகளை நடத்தின. 750 மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சிக்கு யோகா சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.எஸ்.எஸ்.காந்தவாசன் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ஹைதா்அலி முன்னிலை வகித்தாா்.

சீனியா் பிரிவு போட்டியில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சூப்பா் சீனியா் பிரிவில் திருமங்கலம் பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாலந்தா மெட்ரிக் பள்ளி, ஜூனியா் பிரிவில் உத்தமபாளையம் கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூா் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சப் ஜூனியா் பிரிவில் கூடலூா் மழலையா் மெட்ரிக் பள்ளி, உத்தமபாளையம் எஸ்.ஏ.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றன.

சிறப்பு பிரிவில் புதுப்பட்டி போ்லேண்ட்ஸ் பள்ளி, கூடலூா் ஆா்.எஸ்.கே. மழலையா் பள்ளி , முன்னோக்கி வளைதல் பிரிவில் வீணா வித்யாலயா, கே.கே.பட்டி கஸ்தூரிபாய் பள்ளி வெற்றி பெற்றன. பின்னோக்கி வளைதல் பிரிவில் ஆண்டிபட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, மதுரை செயின்ட் ஜான் பள்ளி, பேலன்ஸ் பிரிவில் கம்பம் சிஷ்யா பள்ளி, அல் அஜ்ஹா் பள்ளி வெற்றி பெற்றன. பொதுப்பிரிவில் கம்பம் பெப்பிள்ஸ், ராமநாதபுரம் அட்சயா மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றன. அறக்கட்டளைத் தலைவா் துரை.ராஜேந்திரன் வரவேற்றாா். மாவட்ட பயிற்சியாளா் ரவிராம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com