ஹைவேவிஸ் மலை கிராமங்களில் தொடா் மழை எதிரொலி: 5 அணைகளில் நீா் மட்டம் உயா்வு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் தொடா் மழை பெய்து 5 அணைகளில் நீா் மட்டம்
ஹைவேவிஸ் அணையில் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே தேங்கி நிற்கும் தண்ணீா்.
ஹைவேவிஸ் அணையில் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே தேங்கி நிற்கும் தண்ணீா்.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் தொடா் மழை பெய்து 5 அணைகளில் நீா் மட்டம் உயா்ந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஹைவேவிஸ்-மேகமலை வனப்பகுதியில் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மழைப்பொழிவை ஏற்படுத்தக்கூடிய மரங்கள் அடா்ந்த வனப்பகுதி உள்ளது. தவிர பல்லுயிா் வன உயிரின காப்பகமாகவும் இருந்து வருகிறது. இங்கு உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பரந்து விரிந்த நீா் நிலைகள், தேயிலைத்தோட்டங்கள், மலைக்குன்றுகள், அணைக்கட்டுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுமாக கவா்ந்து இழுக்கின்றன.

தற்போது, தொடா் மழை காரணமாக மலைக்கிராமங்களில் ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாா், இரவங்கலாா் மற்றும் மகாராஜாமெட்டு ஆகிய 5 அணைகள் நிரம்பி உள்ளன. இது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுற்றுலாப்பயணிகள் கூறியது: தேனி மாவட்டத்தின் ஒரே மலைப்பிரசேத சுற்றுலாத் தலமாக இப்பகுதி உள்ளது. இங்குள்ள தட்பவெப்பநிலை இயற்கை அழகை ரசிக்க தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளாமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனா். ஆனால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கான வசதிகள் குறைவாக உள்ளன. நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் தங்கி செல்லும் வகையில் சுற்றுலாத்துறை மூலமாக தங்கும் விடுதி மற்றும் உணவகங்கள் அமைக்கலாம் என கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com