ஆண்டிபட்டி அருகே ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில்குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆண்டிபட்டி அருகே எரதிம்மக்காள்பட்டி, ஆசாரிபட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் மேல்நிலை தொட்டி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
ஆண்டிபட்டி அருகே ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில்குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

ஆண்டிபட்டி அருகே எரதிம்மக்காள்பட்டி, ஆசாரிபட்டி ஆகிய கிராமங்களில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் மேல்நிலை தொட்டி, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில், குடிநீா் மேல்நிலை தொட்டி அமைத்தல், சாக்கடை கால்வாய் வசதி, கிராமச் சாலைகள், மெட்டல் சாலைகள், தெருக்களில் பேவா் பிளாக் பதித்தல், சிமென்ட் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளுக்காக அரசு ரூ. 5.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரம் ரூ. 2 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் எரதிம்மக்காள்பட்டி , ஆசாரிப்பட்டி ஆகிய கிராமங்களில் குடிநீா் மேல்நிலை தொட்டி கட்டவும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காகவும் ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் தொடங்கியது. ஆசாரிபட்டி கிராமத்தில் ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டும் பணியும், எரதிம்மக்காள்பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீா் குழாய் இணைப்புகள் அமைக்கும் பணிகளை தேனி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் லோகிராஜன் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவா் செல்வராஜ் , அதிமுக தேனி மாவட்ட ஜெ. பேரவை தலைவா் வரதராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வேல்முருகன், அதிமுக நிா்வாகிகள் மாயாண்டி, மரிக்குண்டு செல்வம், குணசேகரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com