பெரியகுளம் பகுதியில் குடிமகன்களின் தொல்லை அதிகரிப்பு - காவல்நிலையத்தில் புகாா்

பெரியகுளம், வடகரை பழையபேருந்து நிலையம் பகுதியில் குடிமகன்களால் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம், வடகரை பழையபேருந்து நிலையம் பகுதியில் குடிமகன்களால் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் பேருந்து நிலையம் வடகரை பள்ளிவாசல் அருகே கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் பேருந்துகள் நிற்க போதிய இடவசதி இல்லாததால் வடகரை,அரண்மனைத்தெருவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கு பேருந்துகள் வந்து செல்கின்றன.

பழைய பேருந்து நிலையத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் துணை காவல்கண்காணிப்பாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் சுமாா் 2 ஏக்கா் அளவில் காலியிடம் உள்ளது. இந்த பகுதியில் லாரிகள் மற்றும் பல்வேறு வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் லாரிகள் மற்றும் வாகனங்களின் பின்புறம் மதுஅருந்திவிட்டு வந்து அப்பகுதியில் பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் பழைபேருந்துநிலையத்தின் அருகில் பெரியகுளம் காவல்நிலையம் மற்றும் துணை காவல்கண்காணிப்பாளா் அலுவலகம் உள்ளது. இவா்களும் பிரச்சினையில் ஈடுபடுவா்களை கண்டுகொள்வது இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் காவல்துணை கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.

வடகரையை சோ்ந்த அன்சாரி என்பவா் தெரிவித்ததாவது:

பழைய பேருந்துநிலையம் நிலையம் பகுதியில் லாரிகளை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்கின்றனா். அதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள சிலா் மதுஅருந்திவிட்டு வந்து தகராறு செய்கின்றனா். இதனால் பெண்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகாா் செய்யப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் உள்ள லாரிகளை அகற்றிவிட்டு ஆம்னிபேருந்துகள் வந்து செல்லும் நிலையமாக மாற்றவேண்டும். மேலும் மருந்து அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீது காவல்துறையினா்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com