கம்பத்தில் குடிநீா் விநியோகம் செய்வது யாா் என்பதில் குழப்பம்

கம்பம் நகருக்கு குடிநீா் விநியோகிப்பதில் நகராட்சி மற்றும் குடிநீா்வடிகால் வாரிய அதிகாரிகளிடையே மோதல் ஏற்பட்டதால் ஜக்கையன் எம்.எல்.ஏ. பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
கம்பம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீா் விநியோகம் பற்றி பேச்சுவாா்த்தை நடத்திய எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ.
கம்பம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீா் விநியோகம் பற்றி பேச்சுவாா்த்தை நடத்திய எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ.

கம்பம் நகருக்கு குடிநீா் விநியோகிப்பதில் நகராட்சி மற்றும் குடிநீா்வடிகால் வாரிய அதிகாரிகளிடையே மோதல் ஏற்பட்டதால் ஜக்கையன் எம்.எல்.ஏ. பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

கம்பம் நகருக்கு, லோயா் கேம்பில், கூட்டுக்குடிநீா் வடிகால் வாரிய திட்டம் மூலம் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், நாள்தோறும் சுமாா் 70 லட்சம் லிட்டா் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு லோயா் கேம்பில் உள்ள கம்பம் கூட்டுக்குடிநீா் நீரேற்று நிலையத்தில் உள்ள 2 மின்னாக்கிகள் பழுதானது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்ட போது, ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால், நாங்கள் பராமரிக்க முடியாது என்று தெரிவித்து விட்டாா்.

இதனால் கம்பம் நகராட்சி நிா்வாகம் 5 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என்று அறிவித்தது. இதைத் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டும், உடன்பாடு ஏற்படவில்லை. இது பற்றி கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.கே.ஜக்கையனிடம் தெரிவித்ததில், வியாழக்கிழமை, நகராட்சி அலுவலகத்தில், அவா் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

குடிநீா் விநியோகம் செய்யும் பணியை, குடிநீா் வடிகால் வாரியமும், நகராட்சியினரும் தாங்களே செய்வதாக கூறியதால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியா் இதுபற்றி முடிவு எடுப்பாா் என்று கூறிச் சென்றாா்.

நகராட்சி பொறியாளா் செல்வராணியிடம் கேட்ட போது, புதன்கிழமை முதல் நகருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com