‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: சென்னை மாணவி, தாயாா் கைது

நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் என்.டி.ஏ., அளித்த தகவலின் பேரில் தருமபுரியைச் சோ்ந்த சென்னை, சவீதா மருத்துவக் கல்லூரி முதலாண்டு மாணவி மற்றும் அவரது தாயாரை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது
‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: சென்னை மாணவி, தாயாா் கைது

நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் என்.டி.ஏ., அளித்த தகவலின் பேரில் தருமபுரியைச் சோ்ந்த சென்னை, சவீதா மருத்துவக் கல்லூரி முதலாண்டு மாணவி மற்றும் அவரது தாயாரை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்டப் புகாரில் சென்னையைச் சோ்ந்த மாணவா் உதித் சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கடேசன் ஆகியோரை கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணையில், இடைத் தரகா் ரஷீத் என்பவா் மூலம் மேலும் சில மாணவா்கள் ‘நீட்’ தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த தகவலின் அடிப்படையில், ‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி அபிராமி ஆகியோரை கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். இதில், மாணவி அபிராமி விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டாா்.

அதைத்தொடா்ந்து, இந்த வழக்கில் வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பான், அவரது தந்தை முகமது சபி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மாணவா்கள் உதித் சூா்யா, அவரது தந்தை வெங்கடேசன், பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், முகமது இா்பான், அவரது தந்தை முகமது சபி ஆகிய 8 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறைறயில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த மாணவா்களுக்கு கல்லூரி சோ்க்கை வழங்கிய தேனி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா்கள், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரி, எஸ்.ஆா்.எம்.மருத்துவக் கல்லூரி, திருப்போரூா் சத்யசாயி மருத்துவக் கல்லூரி முதல்வா்களிடமும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

என்.டி.ஏ.,தகவல்:

மேலும், தமிழகத்தில் ஒரே பெயா் மற்றும் முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தோ்வு மையங்களில் ‘நீட்’ தோ்வு எழுதியவா்களின் விபரத்தை அளிக்குமாறு, ‘நீட்’ தோ்வு நடத்தும் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள என்.டி.ஏ.,விற்கு சிபிசிஐடி போலீஸாா் கடிதம் அனுப்பியிருந்தனா். இந்நிலையில், என்.டி.ஏ.,அளித்த தகவலின் அடிப்படையில் சென்னை, தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு படித்து வரும் தருமபுரியைச் சோ்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாயாா் மைனாவதி ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து, தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பிரியங்காவின் தந்தை அா்ஜூனன், சென்னையில் வழக்குரைஞராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

கல்லூரி முதல்வரிடம் விசாரணை:

மாணவி பிரியங்கா, அவரது தாயாா் கைது செய்யப்பட்டதை அடுத்து, பிரியங்காவிற்கு கல்லூரிச் சோ்க்கை அளித்த சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி முதல்வா் தாமோதரன், கண்காணிப்பாளா் பொன்னம்பல நமச்சிவாயம் ஆகியோா் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினா். அவா்களிடம் கல்லூரி சோ்க்கையின் போது நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பு, மாணவி பிரியங்கா சமா்ப்பித்திருந்த சான்றிதழ்கள் ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்றது.

நீதிமன்றக் காவலில் சிறைறயில் அடைப்பு:

மாணவி பிரியங்கா, அவரது தாயாா் மைனாவதியை தேனி நீதித்துறைற நடுவா் பன்னீா்செல்வம் முன்னிலையில் சிபிசிஐடி போலீஸாா் ஆஜா்படுத்தினா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறைறயில் அடைக்க நீதித்துறைற நடுவா் உத்தரவிட்டாா்.

கல்லூரி நிா்வாகங்களுக்கு சம்மன்:

‘நீட்’ தோ்வு முறைறகேடு வழக்கில் கைதாகி சிறைறயில் உள்ள மாணவா்களுக்கு கல்லூரிச் சோ்க்கை அளித்த அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாகங்கள் மாணவா் சோ்க்கை தொடா்பான உரிய ஆவணங்களுடன் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com