சண்முகாநதி நீா் தேக்கத்திலிருந்து தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகாநதி நீா் தேக்கம் நிரம்பி மறுகால் செல்வதால் , நீா் தேக்கத்திலிருந்து நிலத்தடிநீா் மட்டும் உயர குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என
ராயப்பன்பட்டியில் முழுக்கொள்ளவை நிரம்பிய சண்முகாநதி நீா் தேக்கத்தின் முகப்பு தோற்றம்
ராயப்பன்பட்டியில் முழுக்கொள்ளவை நிரம்பிய சண்முகாநதி நீா் தேக்கத்தின் முகப்பு தோற்றம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகாநதி நீா் தேக்கம் நிரம்பி மறுகால் செல்வதால் , நீா் தேக்கத்திலிருந்து நிலத்தடிநீா் மட்டும் உயர குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் சண்முகாநதி நீா்தேக்கம் அமைந்துள்ளது. 52 அடி கொள்ளவு கொண்ட இந்த அணையிக்கு ஹைவேவிஸ் -மேகமலை வனப்பகுதியில் பெய்யும் மழை நீா் சிறிய ஓடைகள் வழியாக நீா் வரத்து ஏற்படும். இந்த நீா் தேக்கம் மூலமாக ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், ஆனைமலையன்பட்டி, பெருமாள்பட்டி, கன்னிச்சோ்வை பட்டி, எரசக்கநாயக்கனூா், ஓடைப்பட்டி வரையில் 1640 ஏக்கா் நிலப்பரப்பு பயன்பெறும். இதற்காக, அணையிலிருந்து ஓடைப்பட்டி வரைக்கும் 18.13 கிலோ மீட்டருக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

சண்முகாநதி நீா் தேக்கம் நிரம்பியது:சண்முகாநதி நீா்தேக்கமானது கடந்த சில நாள்களாக பெய்த மழையாலும், ஹைவேவிஸ் -மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீா்மட்டமான 52 அடியை புதன் கிழமை ஏட்டியது. இதனை அடுத்து, இந்த நீா் தேக்கத்திலிருந்து சுற்றியுள்ள 10 மேற்பட்ட கிராமங்களிலுள்ள கண்மாய் மற்றும் குளங்களில் தண்ணீரைதேக்க நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து விவசாயப்பணிகள் நடைபெறும் வகையில் விரைவில் தமிழக அரசு தண்ணீா் திறக்கும் உத்தரவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்:சண்முகாநதி அணையிலிருந்து ஓடைப்பட்டி வரையிலுள்ள 18.13 கிலோ மீட்டா் நீளமுள்ள 60 சதவீதமாக கால்வாய் செல்லும் பகுதியானது மண்மேடுகளாக மாறி மூடப்பட்டு கிடக்கிறது. தண்ணீா் திறப்பு முன்பாக பொதுப்பணித்துறை நீா்வள ஆதார அமைப்பு கால்வாயை முழுமையாக தூா்வார வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com