ஹைவேவிஸ் மலைச்சாலை பொதுமக்களால் சீரமைப்பு

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழைக்கு சேதமான சாலையை பொதுமக்களே

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சமீபத்தில் பெய்த மழைக்கு சேதமான சாலையை பொதுமக்களே சீரமைத்ததைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உள்பட 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 8 ஆயிரத்திற்கு அதிகமான பொதுமக்கள் வசிக்கினறனர்.  
இந்த மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திட தமிழக அரசு 100.67 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.  இந்த நிதியில் ஹைவேவிஸ் வரை 35 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைவசதிகள் செய்யப்பட்டுள்ளன. பின்பு, ஹைவேவிஸ் முதல் மகாராஜாமெட்டு வரையில் சாலைப்பணிகள் நடைபெறவில்லை.
வனத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கிடையே நடைபெறும் பனிப்போர் காரணமாக இறுதிக்கட்ட சாலைப்பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேல் மணலார் , வெண்ணியார், இரவங்கலார் மற்றும் மகாராஜாமெட்டு என 4 கிராமங்கள் போக்குவரத்தின்றி அவதிப்பட்டனர். 
 இதனையடுத்து  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களே இணைந்து 10 கிலோ மீட்டர் தூரமுள்ள  சாலையை சீரமைப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து  4 கிராமங்களுக்கு நிறுத்தப்பட்ட போக்குவரத்து மீண்டும் துவங்கியது.   எனவே, ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தி கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை தொடங்க வேண்டும் என்ற மலைக்கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com