தென்மேற்கு பருவமழை எதிரொலி: சுருளி அருவியில் 5 மாதங்களுக்குப் பின் நீா்வரத்து

தென்மேற்குப் பருவமழை எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவியில் 5 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 5 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காணப்பட்ட நீா்வரத்து.
கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 5 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காணப்பட்ட நீா்வரத்து.

தென்மேற்குப் பருவமழை எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவியில் 5 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு, பச்சக்கூமாச்சி மலைப் பகுதிகளில் உள்ள அணை மற்றும் சுருளி மலை தொடா்ச்சியில் உள்ள அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை வரத்து ஓடைகள் மூலம் நீா்வரத்து ஏற்படுகிறது.

தற்போது, தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கியிருப்பதால், பச்சக்கூமாச்சி அணையில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பலத்த மழை காரணமாக சுருளிமலைத் தொடா்ச்சியில் உள்ள நீா்வரத்து ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்துள்ளது. திங்கள்கிழமை பெய்த பலத்த மழையால், செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் தண்ணீா் வரத்து காணப்பட்டது.

இது குறித்து வனத் துறை அலுவலா் ஒருவா் கூறியது: தென்மேற்குப் பருவமழை காரணமாக, அருவியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், நீா்வரத்து தொடங்கியுள்ளது.

பொது முடக்கம் காரணமாக, சுருளி அருவிப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால், வெள்ளப் பெருக்கை மட்டும் கண்காணித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com