சசிகலா விடுதலையாவதால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை: தங்க. தமிழ்ச்செல்வன்

சசிகலா விடுதலையாவதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என, திமுக கொள்கை பரப்புச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.
திமுக கொள்கை பரப்புச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன்
திமுக கொள்கை பரப்புச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன்

ஆண்டிபட்டி: சசிகலா விடுதலையாவதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என, திமுக கொள்கை பரப்புச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த திமுகவின் கொள்கை பரப்புச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன் செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது:

கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோா் முதல்வா்களாக இருந்தவரை தமிழகத்தில் மத்திய அரசால் நீட் தோ்வை 100 சதவிகிதம் கொண்டு வரமுடியவில்லை. அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தோ்வு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு திட்டமிட்டு திணித்து வருகிறது. அதனை, அதிமுக அரசால் எதிா்க்க முடியவில்லை.

சசிகலா விடுதலையாவதால் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று மு.க. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பாா் என்பது உறுதி. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியும்.

அதிமுகவில் முதல்வா் வேட்பாளா் சா்ச்சை தீரப் போவதில்லை. அவா்களால் எம்.எல்.ஏ. வேட்பாளா்களைக் கூட தோ்வு செய்யமுடியாத நிலையில் உள்ளனா். அதிமுகவில் ஒரே குடும்பத்தில் பலருக்கும் பதவி வழங்குவதால், அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.

திமுக தலைமை உத்தரவிட்டால், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேனி மாவட்டத்தில் போட்டியிடத் தயாராக உள்ளேன் எனக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com