கம்பத்தில் சீா்மரபினா் நல சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை அமல் படுத்தக்கோரி, கம்பத்தில் சீா்மரபினா் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை அமல் படுத்தக்கோரி, கம்பத்தில் சீா்மரபினா் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாநில இளைஞரணிச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். விவசாய அணிச் செயலாளா் செங்குட்டுவன், வழக்குரைஞா் பிரிவுச் செயலாளா் கவுதம், நகரச் செயலாளா் காளீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் ( ஓ.பி.சி. ) சோ்க்க வேண்டும். 2011 -ஆம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். ஓ.பி.சி. கிரிமிலேயரை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, அனைத்து தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆப்பாட்டத்தில், வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப் என அனைத்து தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com