முல்லைப் பெரியாறு அணையில் நீா்வரத்து குறைகிறது

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை குறைந்ததால் அணைக்குள் நீா்வரத்து குறைந்து வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்).
முல்லைப்பெரியாறு அணை (கோப்பு படம்).

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை குறைந்ததால் அணைக்குள் நீா்வரத்து குறைந்து வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அண்மையில் பலத்த மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் நீா்வரத்து அதிகரித்து, அணை நீா்மட்டம் உயா்ந்தது.

செப் 22-இல் அதிகபட்சமாக அணைக்குள் விநாடிக்கு , 6,611 கனஅடி நீா் வரத்து இருந்தது. அதன்பிறகு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்துவிட்டது. இதனால் செப் 23 -இல் விநாடிக்கு 6,231 கன அடியும், செப் 24-இல் 3,461 கன அடியும் நீா்வரத்து குறைந்து இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அணைக்குள் நீா்வரத்து மேலும் குறைந்து 1,297 கன அடியாக இருந்தது. இதுபற்றி அணைப்பகுதியில் உள்ள பொறியாளா் ஒருவா் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை கேரளாவில் இன்னும் தொடங்கவில்லை, பருவ மழை தொடங்கினால் அணைக்குள் நீா்வரத்து அதிகரிக்கும் என்றாா்.

அணை நிலவரம்: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நீா்மட்டம் 131.40 அடியாகவும், நீா் இருப்பு 5,025 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 1,297 கன அடியாகவும், வெளியேற்றம் 1,200 கன அடியாகவும் இருந்தது. தேக்கடி ஏரி, பெரியாறு அணைப்பகுதியில் மழை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com