ரோந்துப் பணி காவலா்கள் விபரம் சமூக வலை தளத்தில் வெளியீடு

தேனி மாவட்டத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விபரம் தினமும் காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விபரம் தினமும் காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி கூறியது: மாவட்டத்தில் இரவு நேரத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், தடுப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு உதவும் வகையிலும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள் மற்றும் காவலா்களின் பெயா், செல்லிடப்பேசி எண் ஆகியவை தினமும்  சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி, ரோந்துப் பணியில் உள்ள காவலா்களை தொடா்பு கொள்ளலாம். மேலும், காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04546-250100, செல்லிடபேசி எண்: 88709 85100 ஆகியவற்றில் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com