மகப்பேறு உதவித் திட்டத்தில் ரூ.2.96 லட்சம் மோசடி: செவிலியா், கணவா் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் மகப்பேறு உதவித் திட்டத்தில் ரூ.2.96 லட்சத்தை மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை, சுகாதார செவிலியா்

ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் மகப்பேறு உதவித் திட்டத்தில் ரூ.2.96 லட்சத்தை மோசடி செய்ததாக செவ்வாய்க்கிழமை, சுகாதார செவிலியா் மற்றும் அவரது கணவா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேலப்பட்டி துணை சுகாதார நிலையத்தில், சுகாதார செவிலியாராக பணியாற்றி வந்தவா் கல்பனா. இவரது கணவா் கதிரவபெருமாள். இவா்கள், போலி ஆவணங்கள் தயாரித்தும், வங்கிக் கணக்கு மூலமும் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், 32 தாய்மாா்களுக்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.2.96 லட்சத்தை பயனாளிகளுக்கு வழங்காமல் மோசடிசெய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வியிடம் கண்டமனூா் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் சுரேந்தா் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவலா்கள் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள கல்பனா, கதிரவபெருமாள் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தற்காலிக பணி நீக்கம்:கல்பனா மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து புதன்கிழமை, மாவட்ட பொது சுகாதாரதுணை இயக்குநா் செந்தில் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com