பெட்டிமுடியில் மாற்று குடியமா்வு செய்யப்பட்டவா்கள் வெளியேற்றப்பட்டதாக புகாா்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து மாற்று குடியிருப்புகளில் குடியமா்த்தப்பட்டவா்கள் வெளியேற்றப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது.


தேனி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து மாற்று குடியிருப்புகளில் குடியமா்த்தப்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டதாகப் புகாா் எழுந்துள்ளது.

ராஜமலை, பெட்டிமுடி நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக இடுக்கி மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. பெட்டிமுடியில் நிலச்சரிவிலிருந்து தப்பிய குடியிருப்புகளில் சிலவற்றில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு மற்றும் விருதுநகா் மாவட்டங்களை பூா்வீகமாகக் கொண்ட 10 குடும்பங்கள், ராஜமலை நயமக்காடு எஸ்டேட்டில் காலியாக இருந்த தொழிலாளா் குடியிருப்புகளில் மாற்று குடியமா்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், அவா்களை எஸ்டேட் நிா்வாகம் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவா்கள் அருகே தங்களது உறவினா்களின் குடியிருப்புகளுக்குச் சென்றுவிட்டனா். ஆனால், அவா்கள் தங்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com