கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடரும் சண்டை ஆடுகள் திருட்டு

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சண்டைக்கு வளர்க்கும் ஆடுகள் திருட்டு போவதால் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள்  கோரியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சண்டைக்கு வளர்க்கும் ஆடுகள் திருட்டு போவதால் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள்  கோரியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாரம்பரிய கலையான ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்கும் மாடுகள்,  சண்டை சேவல், சண்டை ஆட்டு கிடாக்கள் ஆகியவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

கிடா முட்டு சண்டைகளில் பங்கேற்கும் ஆடுகள் அடிக்கடி திருடு போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது பற்றி சண்டை கிடா வளர்ப்பவர்கள் கம்பம் மற்றும் கூடலூர் காவல் நிலையங்களில் புகார் செய்துள்ளனர்.

கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தில், ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான ஆடு கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் திருடு போயுள்ளது.

இதுபற்றி ஈஸ்வரன் கம்பன் தெற்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார். இது தொடர்பாக பேசிய அவர், “சண்டை போட்டிகளுக்காக வளர்க்கப்படும் ஆடுகள் 60 முதல் 80 கிலோ எடை கொண்டதாகும். இதை சிலர் இறைச்சிக்காக திருடிச் சென்று விற்பனை செய்து வருகிறார்கள். தொடர் திருட்டுகள் இதேபோல் நடைபெற்று  வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து திருடர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com