தேனியில் 4.8 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

தேனி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 8,385 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ.2,500 வழங்கும் பணி நியாயவிலைக் கடைகளில் வரும் ஜன. 4 ஆம் தேதி தொடங்குகிறது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 8,385 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ.2,500 வழங்கும் பணி நியாயவிலைக் கடைகளில் வரும் ஜன. 4 ஆம் தேதி தொடங்குகிறது.

நியாய விலைக் கடைகளில் அரிசி விநியோகம் பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசு சாா்பில் பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி, தலா 20 கிராம் உலா் திராட்சை, முந்திரிப்பருப்பு, 5 கிராம் ஏலக்காய், கரும்பு, துணிப்பை கொண்ட தொகுப்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரூ.2,500 வழங்கப்படுகிறது.

இதற்காக, தேனி மாவட்டத்தில் சக்கரை விநியோகத்திலிருந்து அரிசி விநியோகத்திற்கு மாற்றிய குடும்ப அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள் உள்ளிட்ட அரிசி விநியோகம் பெறும் 4 லட்சத்து 8,385 குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி டிச. 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரா்களுக்கு சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வரும் ஜன. 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையும், விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன. 13 ஆம் தேதியும் நடைபெறும். நியாய விலைக் கடைகளில் பயோ-மெட்ரிக் முறையை விடுத்து, குடும்ப அட்டை பதிவு முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கண்காணிப்புக் குழு அமைப்பு: நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதை கண்காணிப்பதற்கு பெரியகுளம் வட்டாரத்தில் சாா்-ஆட்சியா் சினேகா, உத்தமபாளையத்தில் வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) நிறைமதி, தேனி வட்டாரத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சிவசுப்பிரமணியன், ஆண்டிபட்டி வட்டாரத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சாந்தி, போடி வட்டாரத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் காா்த்திகேயினி ஆகியோா் தலைமையில், துணை வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com