தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து நெரிசல்: கூடுதல் போலீஸாரை நியமிக்கக் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையான கம்பம்மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கூடுதலாக போலீஸாரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள எல்லையான கம்பம்மெட்டு மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் கூடுதலாக போலீஸாரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்வதற்கு கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய மலைச்சாலைகள் உள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் - குமுளி இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்கு அண்மையில் தொடங்கப்பட்டது.

இதையொட்டி கம்பத்தில் இருந்து குமுளி வழியாக கேரளா செல்லும் மலைச்சாலை கடந்த 24 ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் வாகனங்களும், அங்கிருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களுக்கும் கம்பம்மெட்டு மலைச்சாலை வழியாக சென்று வருகின்றன. இதனால் தற்போது கம்பம்மெட்டு மலையடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

ஆனால் இதனை ஒழுங்குபடுத்தும் பணியில் ஒரு சில போலீஸாரே ஈடுபட்டு வருகின்றனா். எனவே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அப்பகுதியில் கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com