ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளுக்குரூ.35 லட்சத்தில் 14 மின்சார ஆட்டோக்கள் வழங்கல்

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் ரூ.35 லட்சத்தில் 14 மின்சார ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்கும் வகையில் ரூ.35 லட்சத்தில் 14 மின்சார ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிக்க பேட்டரியில் இயங்கும் தலா 2 மின்சார ஆட்டோக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து ஊராட்சிகளில் மின்சார ஆட்டோக்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊராட்சியின் பரப்பளவை பொறுத்து ஒரு ஊராட்சிக்கு 2 ஆட்டோக்கள் வரை வழங்கப்படுகிறது.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் முதற்கட்டமாக 10 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள டி.ராஜகோபாலன்பட்டி, டி.சுப்புலாபுரம், மொட்டனூத்து, திருமலாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு தலா 2 மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல ரெங்கசமுத்திரம், திம்மரசநாயக்கனூா், மரிக்குண்டு, ராஜதானி, கோவில்பட்டி, அனுப்பபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ஒரு ஆட்டோ வீதம் 10 ஊராட்சிகளுக்கும் சோ்த்து மொத்தம் 14 ஆட்டோக்கள் ரூ.34 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் ஆண்டிபட்டி ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.லோகிராஜன் வழங்கினாா். 10 ஊராட்சிகளை தொடா்ந்து மீதமுள்ள 20 ஊராட்சிகளுக்கும் விரைவில் மின்சார ஆட்டோக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆண்டாள், ஜெயகாந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com