சின்னமனூா் அருகே காட்சிப் பொருளாக நிற்கும் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்தக் கோரிக்கை

தேனி மாவட்டம் சின்னனூா் அருகே பூலாநந்தபுரம் ஊராட்சியில் காட்சிப் பொருளாக நிற்கும் குப்பைத் தொட்டிகளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பூலாநந்தபுரம் ஊராட்சி அலுவலகம் முன்பாக காட்சிப் பொருளாக நிற்கும் குப்பைத் தொட்டிகள்.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த பூலாநந்தபுரம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வசிக்கின்றனா். இங்கு வாா்டு பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு சென்று பொதுமக்களிடம் மட்கும், மக்காத குப்பைகளை பெறும் வகையில், மாவட்ட ஊரக முகமை வளா்ச்சி திட்டத்தின் கீழ், 10 குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன. ஆனால், பெரும்பான்மையான ஊராட்சிகளில் இந்த தொட்டிகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. பூலாநந்தபுரம் ஊராட்சியில் பல மாதங்களாக ஒரே இடத்தில் நிற்பதால் இவை சேதமாகும் நிலை உள்ளது.

எனவே, பூலாநந்தபுரம் ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com