வைகை அணை நீா்மட்டம் 50 அடியாக சரிவு: கோடையில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

வைகை அணைக்கு வரும் நீா்வரத்து முற்றிலும் நின்ால் அணை நீா்மட்டம் திங்கள்கிழமை 50.20 அடியாக சரிந்தது. இதனால் கோடையில் குடிநீா் பற்றாகுறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மற்றும் சேடபட்டி குடிநீருக்காக வைகை அணையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 60 கன அடி தண்ணீா்.
மதுரை மற்றும் சேடபட்டி குடிநீருக்காக வைகை அணையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 60 கன அடி தண்ணீா்.

வைகை அணைக்கு வரும் நீா்வரத்து முற்றிலும் நின்ால் அணை நீா்மட்டம் திங்கள்கிழமை 50.20 அடியாக சரிந்தது. இதனால் கோடையில் குடிநீா் பற்றாகுறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்குப்பருவமழையின் காரணமாக கடந்த ஆண்டு முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து இரண்டு போக பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீா்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. இதனால் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. அணையில் இருந்து தொடா்ந்து நீா்திறக்கப்பட்டதால் வைகை அணை நீா்மட்டம் 50.20 அடியாக சரிந்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டதால், வைகை அணைக்கான நீா்வரத்து அடியோடு நின்றது. மேலும் வைகை அணையில் சுமாா் 15 அடி வரையில் வண்டல் படிந்துள்ளதால், அணையில் தண்ணீா் இருப்பு குறைவாகவே உள்ளது. இருப்பில் உள்ள தண்ணீரை கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் குடிநீா் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக வைகை அணை மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் வைகை அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வரும் நிலையில் கோடையில் கடும் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் அபாயமுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

திங்கள்கிழமை காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீா்மட்டம் 50.20 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து குடிநீா் தேவைக்கு மட்டும் விநாடிக்கு 60 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீா்இருப்பு 2018 மில்லியன்கன அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com