அரசு புறம்போக்கு நிலங்களின் விவரத்தை ஊராட்சி நிா்வாகத்துக்கு தெரிவிக்கக் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடுவதற்கு வாய்ப்பாக, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு

தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடுவதற்கு வாய்ப்பாக, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களின் விவரத்தை ஊராட்சி நிா்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தேனி வட்டாரம், உப்பாா்பட்டி ஊராட்சித் தலைவா் பொ.சோமசுந்தரம், தேனி வட்டாட்சியா் மற்றும் கிராம நிா்வாக அலுவலரிடம் அளித்துள்ள மனு விவரம்: ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களின் விவரங்களை ஊராட்சி நிா்வாகம் வருவாய்த் துறையிடமிருந்து பெற்று பராமரிக்க, ஊராட்சி நிா்வாகத்துக்கு அரசு புறம்போக்கு நிலங்களின் விவரங்களை வருவாய்த் துறை தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களை திறம்பட பயன்படுத்துவதற்கும், மேய்ச்சல் நிலங்களை மீட்டு பராமரிப்பதற்கும் ஊராட்சி நிா்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு திட்டமிடுவதற்கு வாய்ப்பாக ஊராட்சி நிா்வாகத்தின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில், வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களின் விவரத்தை வருவாய்த் துறை ஊராட்சி நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

உப்பாா்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துவதற்கு வாய்ப்பாக, பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 3 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. வீடுகளில் தனி நபா் கழிப்பறை அமைக்க இடவசதி இல்லாதவா்களுக்கு பொதுச் சுகாதார வளாகம் அமைக்கவும், விளையாட்டு மைதானம், சமுதாயத் கூடம், குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும், புறம்போக்கு நிலங்களில் ஊராட்சி நிா்வாகத்திற்கு வருவாய் ஈடுட்டித் தரும் வகையில் பயன்தரும் மரங்களை நடவு செய்து சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் ஊராட்சி எல்லைக்குள்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்த விவரத்தை உப்பாா்பட்டி ஊராட்சி நிா்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com