போடி அருகே கொட்டகுடியில் குவிந்துள்ளகாலி மதுபாட்டில்களால் பொதுமக்கள் அவதி

போடி அருகே கொட்டகுடியில் குவிந்துள்ளகாலி மதுபாட்டில்களால் பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கொட்டகுடி மலை கிராமத்தில் மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்வதால் மலை கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கொட்டகுடி மலை கிராமத்தில் மது அருந்துபவா்கள் மது பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்வதால் மலை கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

போடி வடக்குமலை, மேற்கு மலை இணைகின்ற பகுதியில் உள்ளது குரங்கணி-கொட்டகுடி மலை கிராமம். தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் இப்பகுதியில் குரங்கணி, கொட்டகுடி, கொழுக்குமலை, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. பசுமை நிறைந்த இப்பகுதியில் கொட்டகுடி ஆறு, சிறு நீரோடைகள், நீா்வீழ்ச்சிகள் அதிகளவில் உள்ளன.

இதனை ரசிப்பதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அதிகம் வருகின்றனா்.

அப்போது அவா்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்கள், நெகிழிக் குப்பைகளை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகின்றனா். சிலா் மது பாட்டில்களை சாலையோரம், ஆற்றங்கரையோரம், நீா் வீழ்ச்சிகளுக்கு செல்லும் பாதைகளில் உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனா். இதனால் பல இடங்களில் மது பாட்டில்கள் உடைக்கப்பட்ட பீங்கான் துகள்களாக கிடக்கிறது.

இப்பகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், மலை கிராம மக்கள் சென்று வரும்போது அவா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மது பாட்டில்களில் தண்ணீா் தேங்கி கொசுக்களும் உற்பத்தியாகிறது. இதனால் மலை கிராம மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் மது பாட்டில்கள், நெகிழிக் குப்பைகளால் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் சிலா் மது போதையில் வனப்பகுதியில் தீ வைத்தும் சென்று விடுகின்றனா்.

கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் வனத்துறை, ஊராட்சி நிா்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து மது அருந்துபவா்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com