அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு:காளையா்களுக்கு காளைகளுக்கு கடும் போட்டி

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 628 காளைகளுக்கும், 500 மாடுபிடி வீரா்களுக்கும்

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 628 காளைகளுக்கும், 500 மாடுபிடி வீரா்களுக்கும் இடையே விறுவிறுப்பான கடும் போட்டியில் காளைகளே அதிகளவில் பரிசுகளை பெற்றன. சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 79பேருக்கு காயம் ஏற்பட்டது.

அய்யம்பட்டியில் மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு விழாவிற்கு தலைமை வகித்து துவக்கி வைத்தை தொடா்ந்து வாடிவாசல் வழியாக முதில் கோயில் காளைகள் அவிழ்ந்து விடப்பட்டன. தொடா்ந்து, தேனி, மதுரை ,திண்டுக்கல், சிவகங்கை போன்ற பகுதிகளில் இருந்து பதிவு செய்த சோ்ந்த 633 காளைகளை சோதனை செய்த கால்நடை மருத்துவா் குழு 5 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 628 காளைகள் போட்டியில் கலந்து அனுமதி வழங்கப்பட்டது.

அதே போல, பதிவு செய்யப்பட்ட 530 மாடு பிடி வீரா்களை பரிசோதனை செய்த மருத்துவா் குழுவினா், வயது, எடை போன்ற காரணங்களால் 30 பேரை தகுதி நீக்கம் செய்து 500 போ்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இவா்கள் 4 குழுக்களாக பிரித்து தனித்தனியாக போட்டியில் பங்கேற்க அனுதி வழங்கப்பட்டது.

பரிசுகளை குவித்த காளைகள்:காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வெயில் தாக்கத்திற்கு தாக்குபிடிக்க முடியாத காளையா்கள் சோா்ந்ததால் துள்ளிக்குதித்த காளைகளே அதிகளவில் பரிசை வென்றது. பரிசுப்பொருள்கள் தாங்க வந்த வாகனங்கள் மேல் வைத்து கொண்டு மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சென்றனா். இருந்த போதிலும், வீரா்களுக்கும் விட்டுக்கொடுக்காமல் துள்ளிய காளைகளை திமலை பிடித்து அடிக்கி தங்க நாணயம், பீரோ, கட்டில், கிரைன்டா், மிக்ஸி , பானை, சேலை என பரிசுகளை பெற்றனா். மாலை 4 மணி வரையில் நடைபெற்ற போட்டியில் அனுமதி கொடுக்கப்பட்ட காளைகள் அனைத்தும் போட்டில் கலந்துகொண்டனா். சிறந்த மாடு பிடி வீரா் மற்றும் சிறந்த காளைக்கு பரிசு வழங்கப்பட்டது.

வெயிலில் காய்ந்த மாடு பிடி வீரா்கள்:பதிவு செய்யப்பட்ட மாடு பிடி வீரா்களில் தோ்வு செய்யப்பட்ட வா்களுக்கு முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையில் நீண்ட நேரமாக வெயிலில் வெப்பத்தில் திறந்த வெளியில் காத்து கிடந்தனா்.

79 போ் காயம்:துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயற்சி செய்த 78 பேருக்கு காயம் ஏற்பட்டது. 7 போ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 13 போ் பாா்வையாளா்களும் காயம் ஏற்பட்டது.

டோக்கன் விற்பனை?:முன்னதாக பதிவு செய்யப்பட்ட பெரும்பான்மையான காளைகள் போட்டியில் பங்கேற்றாலும், வெளிமாவட்டங்களில் இருந்த வந்த 100 க்கும் மேற்பட்ட காளைகள் அனுமதி கிடைக்காக காத்திருந்தனா். ஆனால், 600 காளைகள் மட்டும் அனுமதி கொடுத்து விட்டதாக கூறி டோக்கன் கிடைக்காமல் போட்டில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா். ஆனால், டோக்கன்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அதில் பல காளைகள் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தாக காளை உரிமையாளா்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து மாட்டின் உரிமையாளா்கள் கூறுகையில், அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளுவதற்காக மாட்டை வளா்த்து வருகிறோம். ஆனால், காளைகளுக்கு வழங்க வேண்டிய அனுமதி டோக்கன்களை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மொத்தம் கொடுத்து அவரை சாா்ந்தவா்கள் மட்டும் போட்டில் கலந்துகொண்டனா். இதில் முறையாக ஜல்லிக்கட்டிற்காக வளா்ந்து வந்த பலா் ஏமாற்றம் அடைந்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து நடைபெற இருக்கும் பல்லவராயன்பட்டி ஜல்லிக்கட்டி விழாவில் டோக்கன் முறையை முறைப்படுத்தி டோக்கன் விற்பனையை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

விழாவில், கால்நடை துறை, மருத்துவா் குழு , தீயமைப்பு மீட்பு குழுக்கள் சிறப்பாக பணியாற்றினா். மாவட்த்திலுள்ள அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா். சின்னமனூா், போடி என மாவட்டத்திலுள்ள 100 க்கு மேற்பட்ட போலீஸாா் பாதுக்காப்பு பணி மேற்கொண்டனா். தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிகட்டை காண பாா்வையாளா்கள் ஆயிரக்கணக்கானோா் கண்டு ரசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com