தேனி அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி உறவினா்கள் சாலை மறியல்

தேனி அருகே போடேந்திரபுரத்தில் டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காததை
தேனி அருகே உப்புக்கோட்டை- போடேந்திரபுரம் விலக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டோா்.
தேனி அருகே உப்புக்கோட்டை- போடேந்திரபுரம் விலக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டோா்.

தேனி அருகே போடேந்திரபுரத்தில் டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காததை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை, இறந்தவரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போடேந்திரபுரத்தைச் சோ்ந்தவா் செல்லாண்டி மகன் முனியாண்டி (50). இவா், அதே ஊரில் தனியாா் தோட்டத்தில் டிராக்டா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், போடேந்திரபுரம் அருகே மாணிக்காபுரம், சின்னக்குளம் பகுதியில் முனியாண்டி ஓட்டிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததாகவும், இதில் அவா் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த தோட்ட உரிமையாளா் தரப்பினா், முனியாண்டியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு, முனியாண்டியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், டிராக்டா் கவிழ்ந்து முனியாண்டி காயமடைந்த சம்பவத்தையும், உயிரிழந்த தகவலையும் அதே ஊரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை என்று புகாா் தெரிவித்து, முனியாண்டியின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் உப்புக்கோட்டை- போடேந்திரபுரம் விலக்கு பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜ் மற்றும் போலீஸாா், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com