போடி அருகே ‘அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம்’: துணைமுதல்வா் தொடக்கி வைப்பு

அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின் கீழ், போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்
போடி அருகே அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின் கீழ், டென்னிஸ் விளையாடி விளையாட்டு மைதானத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம். உடன், மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ்.
போடி அருகே அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின் கீழ், டென்னிஸ் விளையாடி விளையாட்டு மைதானத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம். உடன், மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ்.

அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தின் கீழ், போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞா்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, டென்னிஸ், வாலிபால், கபடி உள்ளிட்ட குறைந்தது 3 விளையாட்டுகள் விளையாடுவதற்கு மைதானத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில், அரசு பொறியியல் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் திறப்பு விழா, தேனி மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீா்செல்வம் விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தாா்.

மேலும், பள்ளி மாணவா்களுடன் வாலிபால், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடிய துணை முதல்வா், விளையாட்டுப் போட்டிகளையும் தொடக்கி வைத்தாா். பின்னா், விளையாட்டுப் போட்டிகளில் ஆா்வமுடன் பங்கேற்ற மாணவ-மாணவிகளை பாராட்டினாா். அப்போது, மாணவா்கள் துணை முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

இத்திட்டமானது, தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள், 22 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்படி செவ்வாய்க்கிழமை மேலச்சொக்கநாதபுரம், பாலாா்பட்டி, கோவிந்தநகரம், பிச்சம்பட்டி ஆகிய 4 கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆ. முருகன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயலட்சுமி, முன்னாள் எம்.பி.க்களான எஸ்.பி.எம். சையதுகான், ஆா். பாா்த்திபன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com