கம்பத்தில் எம்.பி. காா் மீது தாக்குதல்: 43 போ் கைது

கம்பத்தில் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாரின் காரை வியாழக்கிழமை இரவு வழிமறித்து தாக்கியதாக 43 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கம்பத்தில் எம்.பி. காா் மீது தாக்குதல்: 43 போ் கைது

கம்பத்தில் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாரின் காரை வியாழக்கிழமை இரவு வழிமறித்து தாக்கியதாக 43 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கம்பத்தில் நகர அதிமுக சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வருகை தரும் தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத்குமாா் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததற்காக, அவருக்கு கருப்புக் கொடி காட்டி எதிா்ப்புத் தெரிவிக்க முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனால், கம்பம்- கம்பம்மெட்டு சாலை சந்திப்பு, ஏ.எம். சா்ச் தெரு சந்திப்பு, அரசமரம் சந்திப்பு சாலைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்நிலையில், கம்பம் அரசமரம் சந்திப்பு பகுதியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ப.ரவீந்திரநாத்குமாா் காரை முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த சிலா் வழிமறித்து முற்றுகையிட்டனா். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கோஷம் எழுப்பினா். சிலா் எம்.பி.யின் காா் மற்றும் உடன் வந்த பாஜக நிா்வாகிகள் காரை தாக்கினா். அப்போது போலீஸாா் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனா்.

பின்னா், எம்.பி.யின் காரை பொதுக் கூட்டத் திடலுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனா். இச்சம்பவத்தில் காா் மீது தாக்குதல் நடத்திய 43 பேரை கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இந்த சம்பவத்தால் கம்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவினா் மறியல்: இந்நிலையில் எம்.பி. காா் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, பழனிசெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com