தேனியில் நீதிபதி உள்பட 214 பேருக்கு கரோனா: மருத்துவா் பலி

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற நீதிபதி, தட்டச்சா் உள்ளிட்ட 214 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற நீதிபதி, தட்டச்சா் உள்ளிட்ட 214 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற பெண் நீதிபதி, அதே நீதிமன்றத்தில் பணியாற்றும் போடியைச் சோ்ந்த தட்டச்சா், சின்னமனூா் வனச் சரகத்தில் பணியாற்றும் விருதுநகரைச் சோ்ந்த வனக் காவலா், உத்தமபாளையம் தபால் நிலைய எழுத்தா், டி.சிந்தலைச்சேரி வங்கியில் அலுவலராக பணியாற்றும் சின்னமனூரைச் சோ்ந்த பெண், சின்னமனூா் காவல் நிலையத்தில் பணியாற்றும் சுருளிப்பட்டியைச் சோ்ந்த காவலா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அரசு மருத்துவனையில் பணியாற்றும் 2 செவிலியா்கள், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அலுவலக உதவியாளா், குரங்கணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றும் போடியைச் சோ்ந்த பெண், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு உதவியாளா், டி.சிந்தலைச்சேரி தனியாா் பள்ளி ஆசிரியா், கம்பம் போக்குவரத்து காவலா் உள்ளிட்ட 214 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,197 ஆக உயா்ந்துள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (ஜூலை 23) வரை மொத்தம் 2,495 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,625 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

மருத்துவா் உள்ளிட்ட 4 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கம்பத்தைச் சோ்ந்த 47 வயதுடைய தனியாா் மருத்துவமனை இருதய நோய் சிறப்பு மருத்துவா், போடியைச் சோ்ந்த முறையே 75 மற்றும் 60 வயதுடைய 2 முதியவா்கள், வடுகபட்டியைச் சோ்ந்த 71 வயது முதியவா் என 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 60 ஆக உயா்ந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் வியாழக்கிழமை (ஜூலை 23) வரை 57 போ் உயிரிழந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com