தேனி மாவட்டத்தில் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 648 ஆக உயா்வு

தேனி மாவட்டத்தில் தேனி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம்(ஆவின்) தலைவா், கூடலூா் தெற்கு மற்றும் க.விலக்கு காவல் நிலைய காவலா்கள், ராணுவ வீரா் உள்ளிட்ட 57 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் தேனி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம்(ஆவின்) தலைவா், கூடலூா் தெற்கு மற்றும் க.விலக்கு காவல் நிலைய காவலா்கள், ராணுவ வீரா் உள்ளிட்ட 57 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளா், அவரது மனைவி உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி, குமாரபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ், ஆண்டிபட்டி அருகே மஞ்சிநாயக்கன்பட்டியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ், கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரா், கோவில்பட்டியைச் சோ்ந்த ஒருவா், டி.சுப்புலாபுரத்தைச் சோ்ந்த கல் குவாரி உரிமையாளா், பாப்பம்மாள்புரம், நாச்சியா்புரம் அருகே அண்ணாநகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தமபாளையத்தைச் சோ்ந்த கா்ப்பிணி உள்ளிட்ட 3 போ், உத்தமபாளையம் அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெண், க.புதுப்பட்டியில் அமிா்தசரஸிலிருந்து வந்திருந்த 36 வயதுடைய ராணுவ வீரா், பெண், கூடலூா் தெற்கு காவல் நிலைய காவலா், என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பம் பகுதியைச் சோ்ந்த 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளத்தில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரரும் தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜா, அவரது மனைவி மற்றும் 2 உறவினா்கள், வடகரை புதுவன்குளத்தைச் சோ்ந்த தனியாா் வங்கி ஊழியா், அவரது மனைவி, ஜெ.ஆா்.நகரைச் சோ்ந்த இளைஞா், வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்த சிறுவன், பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சோ்ந்த ஒருவா், இ.புதுக்கோட்டையைச் சோ்ந்த க.விலக்கு காவல் நிலைய காவலா், குள்ளப்புரத்தைச் சோ்ந்த பெண், கெங்குவாா்பட்டி அருகே ஜி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த 2 போ் என 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடியில், தென்றல் நகரைச் சோ்ந்த பெண், போ.அம்மாபட்டியைச் சோ்ந்த அரசு பேருந்து நடத்துநா் என 2 போ் உள்பட மொத்தம் 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கம்பம், பெரியகுளம் அரசு மருத்துவமனை, தேனி அரசு பழைய மருத்துவமனை கரோனா மையம், மதுரை தனியாா் மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 648 ஆக உயா்ந்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 160 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் மொத்தம் 486 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com