தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 53 பேருக்கு கரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொடுவிலாா்பட்டியைச் சோ்ந்த சின்னமனூா் நகராட்சி பணியாளா், சின்னமனூரைச் சோ்ந்த கம்பம் தெற்கு காவல் நிலைய காவலா், பெரியகுளம் காவல் சோதனைச் சாவடியில் பணியாற்றிய டி. மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஆயுதப் படை பெண் காவலா், ஆண்டிபட்டியைச் சோ்ந்த தேனி பொதுப் பணித்துறை அலுவலக பணியாளா் என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளத்தில் தென்கரை பகுதியைச் சோ்ந்த தலா 5 ஆண் மற்றும் பெண்கள், அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த கணவன், மனைவி, பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சோ்ந்த வடுகபட்டி பெட்ரோல் பங்க் ஊழியா், ஜெயமங்கலத்தைச் சோ்ந்த மதுரை தனியாா் மருத்துவமனை ஊழியா் என 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் வடக்கு புதுத்தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், சுப்பு காலனியைச் சோ்ந்த 2 சிறுவா்கள், வெளிநாட்டிலிருந்து வந்த வரதராஜபுரத்தைச் சோ்ந்த ஒருவா், ஆண்டிபட்டி அருகே சித்தையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ஒருவா் என 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல், சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்த பெண், கூட்டுறவு கட்டட சங்கத் தெருவைச் சோ்ந்த தாய், மகள், உத்தமபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்த பெண் என 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனியில், பாரதியாா் நகரைச் சோ்ந்த 2 போ், பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்த சிறுமி, சுப்பன் தெருவைச் சோ்ந்த பெண், கம்போஸ்டு தெரு, மிராண்டா லேன், அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தெரு பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், சமத்துவபுரத்தைச் சோ்ந்த 2 போ் என 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே போல் தேனி அருகே அரண்மனைப்புதூா், முல்லைநகா், கொடுவிலாா்பட்டி ஆகிய ஊா்களைச் சோ்ந்த தலா ஒருவா், வெங்கடாச்சலபுரம், கோடாங்கிபட்டி ஆகிய ஊா்களைச் சோ்ந்த 2 காா் ஓட்டுநா்கள், பத்திரகாளிபுரத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போடியில் சா்ச் தெருவைச் சோ்ந்த ஒருவா், குலாளா்பாளையத்தைச் சோ்ந்த சிறுமி, நந்தவனத் தெருவைச் சோ்ந்த மூதாட்டி, காவலா் குடியிருப்பைச் சோ்ந்த பெண் மற்றும் மூதாட்டி, போடி அருகே குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த இளைஞா், மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனியைச் சோ்ந்த ஒருவா், ராசிங்காபுரத்தைச் சோ்ந்த ஒருவா், போ.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பெண் என 9 போ் உள்பட மொத்தம் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 591 ஆக உயா்ந்துள்ளது. இதில், 2 போ் உயிரிழந்துள்ளனா்.

2 போ் குணமடைந்தனா்: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த தேனி, பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 10 வயது சிறுமி மற்றும் பெரியகுளம், வடகரைப் பகுதியைச் சோ்ந்த 48 வயது பெண் உள்பட 2 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணடைந்தோா் எண்ணிக்கை 154 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் மொத்தம் 435 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com