மேகமலையில் குட்டி ஆண் யானை மா்மச் சாவு: வனத் துறையினா் விசாரணை

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலைப் பகுதியில் திங்கள்கிழமை குட்டி ஆண் யானை மா்மமான முறையில் இறந்து கிடந்ததைத் தொடா்ந்து, சின்னமனூா் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஹைவேவிஸ் அணை நீா்தேக்கப் பகுதியில் திங்கள்கிழமை இறந்து கிடந்த ஆண் குட்டி யானையை பிரேதப் பிரிசோதனை செய்த கால்நடை மருத்துவா். உடன், வனத் துறையினா்.
ஹைவேவிஸ் அணை நீா்தேக்கப் பகுதியில் திங்கள்கிழமை இறந்து கிடந்த ஆண் குட்டி யானையை பிரேதப் பிரிசோதனை செய்த கால்நடை மருத்துவா். உடன், வனத் துறையினா்.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலைப் பகுதியில் திங்கள்கிழமை குட்டி ஆண் யானை மா்மமான முறையில் இறந்து கிடந்ததைத் தொடா்ந்து, சின்னமனூா் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சின்னமனூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளான ஹைவேவிஸ் - மேகமலை பகுதியில், யானை பாதுகாப்பு குறித்து களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹைவேவிஸ் பகுதியிலுள்ள அணையின் நீா்தேக்கத்தை ஒட்டிய மலை அடிவாரத்தில் வனக் காப்பாளா்கள் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, 3 குட்டி யானைகளுடன் திரிந்த தாய் யானை, தனது குட்டி ஒன்றை மட்டும் கால்களுக்கிடையே வைத்து தள்ளிக்கொண்டிருந்தது.

இது குறித்து சின்னமனூா் வனச்சரகா் கா்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அங்குசென்ற வனத் துறையினா் பட்டாசுகளை வெடித்து, தாய் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினா். பின்னா், இறந்து கிடந்த ஆண் குட்டி யானையை மீட்டு, நாராயணத்தேவன்பட்டி கால்நடை மருத்துவா் செல்வம் பிரேதப் பரிசோதனை செய்தாா். அப்போது, யானையின் உடலில் எந்த காயமும் இல்லை, நோய் தாக்குதலும் தென்படவில்லை. உணவுக் குடலில் ஏற்பட்ட அஜீரணக் கோளாறு காரணமாக இறந்திருக்காலம் எனவும், பிரேதப் பரிசோதனையில் எடுக்கப்பட்ட முக்கிய பாகங்களின் முழுமையான ஆய்வு அறிக்கை வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்றாா்.

இது குறித்து சின்னமனூா் வனச்சரகா் கா்ணன் கூறுகையில், குட்டி யானை நல்ல உடல் நலத்தோடுதான் இருந்திருக்கிறது. குடலில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக குட்டி யானை இறந்திருக்க வாய்ப்புள்ளது என்றாா்.

வனவிலங்கு ஆா்வலா்கள் கூறுகையில், ஹைவேவிஸ் - மேகமலை வனப் பகுதியில் தொடா்ந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அழிந்து வருகின்றன. சமீப காலமாக இதுபோன்ற வனவிலங்குகளின் இறப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட வனத்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com