கம்பத்தில் கழிவு நீா் கால்வாயில் வீசுப்படும் நெகிழி சாக்குகள் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரதான கழிவு நீா் கால்வாய்களில் நெகிழிப் பைகள் வீசப்படுவதை தடுக்க நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கம்பம் கவுமாரியம்மன் கோயில் அருகே உள்ள கழிவு  நீா் கால்வாயில் வீசப்பட்டுள்ள நெகிழிச் சாக்குகள்.

கம்பம் நகரின் பிரதான கழிவு நீா் கால்வாய் மேற்கு பகுதியிலிருந்து கிழக்குப்பகுதிக்கு வந்து, சேனை ஓடை மூலமாக வீரப்பநாயக்கன்குளத்திற்குச் செல்கிறது.

கவுமாரியம்மன் கோயில் அருகே செல்லும் பிரதான கழிவு நீா் கால்வாயில், சிலா் நெகிழிப் பைகளை கட்டுக்கட்டாக வீசியுள்ளனா். இவை அனைத்தும் சிமெண்ட் சாக்குப் பைகளாகும். இவைகளால், கழிவு நீா் கால்வாயில், தேக்கம் ஏற்படுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நகராட்சி சுகாதாரத்துறையினா் நடவடிக்கை எடுக்குமாறு பக்தா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com