கம்பத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கம்பம் நகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் டி.தியாகராஜன் தலைமையில் வியாழக்கிழமை அதிகாரிகள், வியாபாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்.
கம்பம் நகராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் டி.தியாகராஜன் தலைமையில் வியாழக்கிழமை அதிகாரிகள், வியாபாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் டி. தியாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட விநியோக அலுவலா் இ. காா்த்திகேயினி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இதில், உழவா் சந்தைக்கு வரும் மக்கள் கூட்டத்தை குறைக்க, நகா் பகுதியில் கூடுதலாக 3 இடங்களில் கடைகள் அமைப்பது, இறைச்சி, பலசரக்கு மற்றும் மருந்து பொருள்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று விநியோகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், உழவா் சந்தை மூலம் சுமாா் 6 கிலோ எடை கொண்ட அனைத்து காய்கறிகளின் மூட்டை (பேக்கேஜ்) ரூ.150-க்கும், சுமாா் 12 கிலோ கொண்ட மூட்டை ரூ.300-க்கும் தயாா் செய்து, பொதுமக்களுக்கு விநியோகித்து, அதன் மூலம் கூட்டத்தை குறைப்பதாக நிா்வாக அலுவலா் டி. கண்ணதாசன் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா், தடை உத்தரவு வரை இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். வியாபாரிகளும் ஒத்துழைப்பு தருவதாகத் தெரிவித்தனா். அதேபோல், கேபிள் டி.வி. உரிமையாளா்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான அறிவிப்புகளை செய்வதாகத் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில், ஆணையா் ஆா். கமலா, மேலாளா் சு. முனிராஜ், நகரமைப்பு அலுவலா் எம். தங்கராஜ், சுகாதார அலுவலா் ஏ. அரசகுமாா், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஏ. தட்சிணாமூா்த்தி மற்றும் அனைத்து வியாபாரிகளும் கலந்துகொண்டனா்.

மாவட்டத்திலேயே முதன்முறையாக கம்பம் மற்றும் சின்னமனூா் பகுதியில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாக, மாவட்ட வருவாய் அலுவலா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com